கொரோனா வைரஸ்
முக்கியமான தகவல் கொரோனா வைரஸ் பற்றியும் பெர்ணின் தற்போதைய நிலமையும் இந்த இணையதளத்தில் தமிழில் அறியலாம்.
பெர்ண் மாநிலத்தின் கொரோனா வைரஸ் இணையதளத்தில் ஜேர்மன் மொழியில் தகவல் அறியலாம்.
உங்களின் பாதுகாப்பு!
என்னிடம் கொரோனா வைரஸ் பற்றிய கேள்விகள் இருக்கிறது. நான் என்ன செய்ய வேன்டும்?
- கொரோனா வைரஸ் பற்றிய ஆலோசனை: Tel. +41 58 463 00 00
- ஜேர்மன் மொழியில் மேலதிய தகவல்: www.bag-coronavirus.ch/
எனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் நான் என்ன செய்யவேண்டும்?
- Coronavirus-Check
- வீட்டில் இருக்கவேண்டும்
- உங்கள் மருத்துவரை அழைக்கவும்
- குடும்ப மருத்துவர் இல்லாவிட்டால் இந்த மருத்துவமனையுடன் தொடர்புகொள்ளவும்: பெர்ணின் Inselspital Tel. +41 31 632 24 02.
அணுகல் நகர நிர்வாகம்
உங்களுக்கு உதவி தேவைப்படின் நகர நிர்வாகத்துடன் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.
இரண்டு முக்கியமான தொடர்பு:
- Kompetenzzentrum Integration: Tel. +41 31 321 60 36; integration@bern.ch
- Einwohnerdienste, Migration und Fremdenpolizei EMF: Tel. +41 31 321 53 00
தொழில், நிதி உதவி
உங்களின் வேலை இடம் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டதா?
- உங்களிற்க்கு குறுகிய கால வேலை (Kurzarbeit) என்றால் உங்கள் முதலாளி விண்ணப்பிக்கலாம். நீங்கள் முதலாளியிடம் தகவல் பெற்றுக் கொள்ளவும்.
- ஊழியர்களுக்கான தகவல் தொழிற்சங்கம் UNIA வில் ஜேர்மன் மொழியில் பெறலாம்.
வேலையால் நீங்கள் நீக்கப்பட்டீர்களா? நீங்கள் வேலையில்லாமல் இருக்கிறீர்களா?
- வேலைவாய்ப்பு மையத்துடன் (RAV) தொடர்பு கொள்ளவும் : பெர்ண் நகரம்.
நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களா?
- பெர்ண் நகரத்தின் சமூக சேவை மையத்துடன் தொடர்பு கொள்ளவும்: Tel. +41 31 321 60 27
உங்கள் நிறுவனம் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டதா?
Wirtschaftsraum Bern நீங்கள் ஜேர்மன் மொழியில் அல்லது வேறு மொழியில் தகவல் பெறலாம்.
சுவிட்சர்லாந்தில் நுழைவு மற்றும் வெளியேறு
வேறு நாடுகளுக்கு பிரயாணம் செல்ல வேண்டாம். Eidgenössischen Departement für auswärtige Angelegenheiten (EDA) வின் இணையதளத்தில் தற்போதைய தகவல் பெற்றுக் கொள்ளவும்.
உங்களுக்கு வெளிநாட்டவர்க் குடியுரிமை அனுமதி (அனுமதிச்சீட்டு B) அல்லது நிரந்தரக் குடியுரிமை அனுமதி (அனுமதிச்சீட்டு C) குறித்து கேள்விகள் உள்ளதா? Einwohnerdienste, Migration und Fremdenpolizei உடன் தொடர்பு கொள்ளவும்: Tel. +41 321 53 00
நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு ஒரு சுற்றுலா பயணியாக சென்றீர்களா, திரும்பி வர முடியாதா?
உங்கள் விசா தொடர்பான தகவல்களை Einwohnerdienste, Migration und Fremdenpolizei (EMF) இன் இணையதளத்தில் காணலாம்.
ஆலோசனை சேவைகள்
கொரோனாவுடன் அன்றாட வாழ்க்கை
- Newsletter Kompetenzzentrum Integration
- ISA Fachstelle Migration: ஒருங்கிணைப்பு மற்றும் இடம்பெயர்வு அத்துடன் கொரோனா பற்றிய இலவச ஆலோசனை: Tel +41 31 310 12 72
- www.dureschnufe.ch இணையதளத்தில் அன்றாட வாழ்க்கைக்கான உதவிக்குறிப்புகள் பார்க்கலாம். அதில் வரும் தலைப்புகள்: தனிமை, வீட்டு அலுவலகம், குடும்ப மோதல்கள், அடிமையாதல் மற்றும் பல தலைப்புகள்.
பெற்றோருக்கு
- தாய் தந்தை ஆலோசனை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கருத்தில் கொண்டு கேள்விகளை ஆலோசிப்பர்கள்: Tel. +41 31 552 16 16 (லேண்ட்லைன் கட்டணம்).
- பாடசாலை சமூக பணி குழந்தைகள் மற்றும் பெற்றோரை கருத்தில் கொண்டு கேள்விகளை ஆலோசிப்பர்கள்.
- Parentu App இல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தகவல்களை பெறலாம். உதவிக்குறிப்புகள் தமிழ் மொழியிலும் பெறலாம். Android அல்லது iPhone (இலவசம்).
- பெற்றோரின் அவசரநிலை: பெற்றோர் மற்றும் பிற பராமரிப்பாளர்களின் 24 மணிநேர உதவியும் ஆலோசனையும் பெறலாம்: Tel. +41 848 35 45 55 (24 மணி நேரம், 365 நாட்கள் ; லேண்ட்லைன் கட்டணம்)
கடினமான குடும்ப சூழ்நிலைகள்
- Frabina – இருமொழி பெற்றோர் மற்றும் குடும்பங்களுக்கு ஆலோசனை மையம்: Tel. +41 31 381 27 01
- திருமணம் மற்றும் குடும்ப ஆலோசனை மையம்: Tel +41 31 312 10 66
- ஆண்களுக்கு தமிழ் மொழியில் ஒரு துண்டுப்பிரசுரம் உள்ளது.
வீட்டில் வன்முறை
- பெர்ண் நகரத்தின் வீட்டில் வன்முறைக்கான துறை இலவச ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குகிறது: Tel. +41 31 321 63 02
- மேலும் பயனுள்ள முகவரிகளை நீங்கள் கூட்டமைப்பத்தின் இணையதளத்தில் காணலாம்.
உளவியல் நெருக்கடி
- Die Dargebotene Hand Bern – நீங்கள் ஒருவருடன் பேச விரும்பினால்: Tel. 143 (24 மணி நேரம், 365 நாட்கள், அநாமதேய, இலவசம்)
- மனநல அவசரநிலை: Kriseninterventionszentrum Tel. +41 31 632 88 11 (365 நாட்கள், அலுவலக நேரம், லேண்ட்லைன் கட்டணம்)
குடியிருப்பு அனுமதி இல்லாதவர்கள்
- ஆலோசனை மையம்: Tel. +41 31 382 00 15
அருகிலுள்ள உதவி
உங்களுக்கு உதவி தேவையா?
- யாராவது உங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கித் தரவா அல்லது தபால் நிலையத்திற்கு போகவேண்டுமா? பெர்ண் மாநிலத்தின் கொரோனா வைரஸ் இணையதளத்தில் நீங்கள் ஆதரவைக் காணலாம்.
நீங்கள் வேறு ஒருவருக்கு உதவ விரும்புகிறீர்களா?
- ஒரு தன்னார்வலராக நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம். பெர்ண் மாநிலத்தின் கொரோனா வைரஸ் இணையதளத்தில் தகவல் பெறலாம்.