ஜெர்மன் மொழி கற்றல்
பேர்ன் நகரம் பேர்ன் நகரில் வாழும் மக்களுக்கு ஜெர்மன் மொழி கற்பதர்க்கு உதவி புரிகிறது. அவ்வகையில் பேர்ன் நகரம் ஜெர்மன் வகுப்புகளுக்கென 500 கூப்பன்களை வழங்கவுள்ளது. ஒரு கூப்பனின் பெறுமதி 400 Fr. ஆகும். அதை பேர்னில் உள்ள 13 பாடசாலைகளில் உபயோகிக்கலாம். மேலதிக விபரங்களை மேற் கொண்டு குறிப்பிட்ட வலையத்தளத்தில் பெற்றுக் கொள்ளவும்: www.bern.ch/deutschbon (Deutsch)
டொச் பயிலுதல்: பேர்ணில் உங்களுக்கு உகந்த பாடத்தை நீங்கள் கண்டுகொள்ளுங்கள்
Muki டொச்பாடங்கள்: Muki டொச் பாடத்தின் மூலம் (தாய் மற்றும் பிள்ளைக்கான டொச் பாடம்)
பிறமொழி பேசும் தாய்மார் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாலர் பாடசாலைக்கு முன்பான வயதுள்ள பிள்ளைகளுடன் சிரமமில்லாது டொச் கற்பதற்கு பாடசாலைத் திணைக்களம் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது
தாய்மொழி = இதயத்தின் மொழி: நீங்கள் உங்கள் பிள்ளையுடன் எந்த மொழியைப் பேசவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தக் கைநூலில் பல மொழிகளைப் பேசும் பெற்றோருக்கான எடுத்துக்காட்டுதல்களைக் காணலாம்