வசித்தல்
பேர்ண் நகரத்தின் குப்பைகளை அகற்றும் நாட்காட்டி
ஒன்றுசேர்ந்து வாழ்தல்: „ஹலோ அயல்வீட்டு ஆண்களே பெண்களே“ எனும் திட்ட துண்டுப் பிரசுரத்தில் „வசித்தல்“ மற்றும் „குப்பை“ எனும் விடயத்தில் ஒன்றுசேர்ந்து வாழ்தல் குறித்த ஒழுங்குகள் என்பதை நீங்கள் 10 மொழிகளில் காணலாம். நீங்கள் இந்த பிரசுரத்தை கணனியிலிருந்து தரவிறக்கலாம். அல்லது இணைவாக்கத்திற்கான தகமை நிலையத்திடம் கோரிப் பெற்றுக்கொள்ளலாம் (integration@bern.ch). இதைவிடவும் இந்தப் பக்கத்தில் மேலதிகமாக படவரைவுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் விளையாட்டுத் திடல்கள் மற்றும் குடும்பத்தோட்டம் எனும் விடயங்களும் உள்ளன. இவ்வாறு நீங்களாகவே ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதுடன் அதை அச்சுப் பிரதி செய்து கொள்ள முடியும்
பேர்ண் நகர சுகாதார சேவையின் காற்றோட்டத்தை சரிவர மேற்கொள்வது என்பது குறித்த விளக்கப்பத்திரம்
„சுவிசில் வசித்தல்“ எனும் தகவல் பத்திரம் வீடு வாடகைக்கு எடுப்பது குறித்த அடிப்படையான தகவல்களைத் தருகின்றது