Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

பிள்ளைகள் மற்றும் குடும்பம்

நீங்கள் ஒரு பிள்ளைகள் பராமரிப்பைத் தேடுகின்றீர்களா? பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு பேர்ண் நகரத்தில் எவ்விதமான வசதிவாய்ப்புகள் உள்ளன? இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் இப்பக்கத்தில் காணலாம்.

எனது பிள்ளைக்கு எவ்விதமான பராமரிப்பு வசதிகள் உள்ளன?

  • பல வித்தியாசமான பராமரிப்பு வசதிகள் உள்ளன: சிறு பிள்ளைகளுக்கான நாள் பராமரிப்பு நிலையம் (Kitas), பாடசாலைப் பிள்ளைகளுக்கான நாள் பராமரிப்பு மற்றும் விடுமுறைப் பராமரிப்பு, அனைத்து வயதுப் பிள்ளைகளுக்குமான நாள்குடும்பங்கள் போன்றவை. பிள்ளைகள் பராமரிப்புக் குறித்த மேலதிக தகவல்களை பேர்ண் நகரத்தின் இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE, EN).

எனக்கு அண்மையாக ஒரு பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தை எவ்வாறு நான் கண்டுகொள்ளலாம்?

சுகாதாரம்

நான் எங்கு ஒரு குழந்தை வைத்தியரைக் காணலாம்?

  • doctorfmh.ch இணையப் பக்கத்தில் நீங்கள் உங்கள் மொழி பேசும் ஒரு ஆண்ஃ பெண் வைத்தியரைத் தேடிக்கொள்ளலாம் (DE, FR. IT, EN).
  • உங்களுக்கு ஒரு வைத்தியரை சந்திப்பதற்குத் தவணை இருப்பதுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவையாக உள்ளது? பல்கலாச்சார மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். மேலதிக தகவல்களை பேர்ண் மாநில பிரதேசத் தொடர்பு ஏற்படுத்தும் நிலையங்களின்  மொழிபெயர்ப்பாளர் இணையப்பக்கம்  ஊடாக நீங்கள் காணலாம் (DE). 

ஆலோசனை மற்றும் பராமரிப்பு

நான் எங்கு குடும்பம் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனைகளைப் பெறலாம்?

விளையாட்டு மற்றும் அசைதல்

விளையாட்டு மற்றும் அசைதல் உடல்நலமானது. விசேடமாகப் பிள்ளைகளுக்கு. அதேவேளை வயதுவந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் இது பொருந்தும். பேர்ணில் பல வசதி வாய்ப்புகள் உள்ளன. இதில் பல இலவசமானது அல்லது சிறு கட்டணமுடையது. இதுகுறித்து விளையாட்டுத் திணைக்கள  இணையத்தளத்தில் அறிந்து கொள்ளுங்கள். அல்லது எம்மைத் தொலைபேசியில் அழையுங்கள். நாங்கள் உதவ விருப்பத்துடன் உள்ளோம்! தொலைபேசி 031 321 67 40 (டொச்). 

மேலதிக தகவல்கள்

  • இந்த பேர்ண் நகரத்தின் விளக்கப் பத்திரம் (PDF, 2.1 MB) பல மொழிகளில் பிரயோசனமான எடுத்துக்காட்டுகளை பல மொழிபேசும் பெற்றோருக்காகக் கொண்டுள்ளது (DE).
  •  பேர்ண் நகர இணையப்பக்கத்தில் குடும்பங்களுக்கான வசதிவாய்ப்புகளை நீங்கள் காணலாம் (DE).
  • பேர்ண் மாநிலம் இந்த விடயங்களுக்கான மேலதிக தகவல்களை Hallo-Bern.ch இல் வழங்குகின்றது. இதில் பெற்றோரின் உரிமைகள் மற்றும் கடமைகள், முரண்பாடு மற்றும் பிள்ளைகள் பராமரிப்புக் குறித்து இதில் அடங்குகின்றது.

Weitere Informationen.

Fusszeile