Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

நிதி

வரிகளை நான் எவ்வாறு மற்றும் எங்கு செலுத்துவது? நான் எவ்வாறு ஒரு மலிவான மருத்துவக் காப்புறுதியை அல்லது ஒரு மலிவான டொச் வகுப்பைக் தேடிக்கொள்ளலாம்? இந்தப் பக்கத்தில் இவ் விடயம் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.

நான் எவ்வாறு மற்றும் எங்கு வரிகளைச் செலுத்துவது?

  • பேர்ண் மாநிலம் வரித் திட்டம் குறித்து பல மொழிகளில் இப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளது  Hallo-Bern.ch.
  • வரி செலுத்துவது, வரி வகைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் கடன் விடயங்கள் குறித்த தகவல்களை ch.ch தளத்தில் நீங்கள் காணலாம் (DE, FR, IT, RM, EN).

  • மேலதிக தகவல்களை நீங்கள் பேர்ண் நகரத்தின் இணையப் பக்கத்தில் காணலாம் (DE). 

எவ்வாறு நான் ஒரு மலிவான மருத்துவக் காப்புறுதியைத் தேடிக்கொள்வது?

  • கூட்டரசின Priminfo இணையப்பக்கத்தில் வித்தியாசமான மருத்துவக் காப்புறுதிக் கட்டணங்களை நீங்கள் ஒப்பிட முடியும் (DE, FR, IT).

எவ்வாறு நான் மருத்துவக் காப்புறுதியின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் (Prämienverbilligung)?

  • குறைந்த பணமுடைய நபர்கள் மலிவான மருத்துவக் காப்புறுதியைப் பெறலாம். அதை «Prämienverbilligung»  என அழைப்பார்கள். இது குறித்த தகவல்களை நீங்கள் பேர்ண் மாநில இணையப் பக்கத்தில்  காணலாம் (DE, FR). 

எங்கு நான் ஒரு டொச் வகுப்பிற்கான பணத்தைப் பெறலாம்?

  • பேர்ண் நகரம் வருடத்தில் ஒரு தடவை பணக்கூப்பன்களை வழங்குகின்றது,
    இதன்மூலம் டொச் பாடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும். மேலதிக தகவல்களை DeutschBon இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம (DE).

  • பேர்ண் பிரதேச கத்தோலிக்க ஆலயம் பேர்ண் பிரதேசத்தில் இலவசமான அல்லது மலிவான டொச் பாடத்திட்டங்கள் பற்றிய ஒரு பட்டியலை தயாரித்துள்ளது (DE).

Weitere Informationen.

Fusszeile