Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

சுகாதாரம்

சுவிஸ் சுகாதார ஒழுங்கமைப்பு எவ்வாறு இயங்குகின்றது? நீங்கள் ஒரு மருத்துவக் காப்புறுதியைத் தேடுகின்றீர்களா? மருத்துவக் காப்புறுதிக்கு பணம்செலுத்த உங்களுக்கு நிதி உதவி தேவைப்படுகின்றதா? உங்கள் மொழியைப் பேசும் ஒரு வைத்தியரைக் கண்டுகொள்ள விரும்புகின்றீர்களா? இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் இப்பக்கத்தில் காணலாம்.

சுகாதாரம் மற்றும் சுவிஸ் சுகாதார ஒழுங்கமைப்பு குறித்த பொதுவான தகவல்கள்

சுவிஸ் சுகாதார ஒழுங்கமைப்பு எவ்வாறு இயங்குகின்றது?

சுகாதார விடயங்கள் குறித்து எங்கு நான் முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்?

  • பேர்ண் மாநிலம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது Hallo-Bern.ch.
  • பேர்ண் சுகாதார இலாகா (DE, FR) வித்தியாசமான விடயங்களான சுகாதார ஊக்கவிப்பு மற்றும் முற்பாதுகாப்பு, போதைக்கு அடிமையாதல், பாலியல் சுகாதாரம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றுக்கு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றது. 
  • சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் சுகாதாரத் தகவல்களை பல மொழிகளில் இங்கே நீங்கள் காணலாம் migesplus.ch.

நோயாளர் காப்பீடு மற்றும் காப்புறுதிகள்

ஒரு நோயாளர் காப்பீட்டை எவ்வாறு மற்றும் எங்கு நான் செய்துகொள்ளலாம்?

நான் எவ்வாறு ஒரு மலிவான நோயாளர் காப்பீட்டு நிறுவனத்தைத் தேடிக்கொள்ளலாம்?

எனக்கு ஒரு விபத்துக் காப்புறுதி தேவையா?

  • நீங்கள் ஒரு வாரத்தில் ஆகக்குறைந்தது 8 மணித்தியாலங்கள் ஊதியம்பெற்று தொழில் புரிவீர்களானால், தொழில் வழங்குனர் உங்களது விபத்துக் காப்புறுதியை ஒழுங்குசெய்வார். நீங்கள் ஊதியம் பெறாத தொழில் செய்வீர்களானால், அல்லது ஒரு வாரத்தில் 8 மணித்தியாலத்துக்கு குறைவாக தொழில் புரிந்தால், நீங்கள் சொந்தமாக ஒரு விபத்துக் காப்புறுதியை செய்துகொள்ள வேண்டும். மத்திய சுகாதார அமைச்சு BAG இதுகுறித்து அறியத்தருகின்றது.

நான் எவ்வாறு நோயாளர் காப்பீட்டில் சலுகையைப் பெறலாம் (சலுகைக் கட்டணக் குறைப்பு)?

  • குறைந்த பணமுடைய நபர்கள் மலிவான நோயாளர் காப்பீட்டைப் பெற்றுக்கொள்வர். இதை «Prämienverbilligung»  என  அழைப்பர். இது குறித்த தகவல்களை நீங்கள் பேர்ண் மாநிலத்தின் இணையப் பக்கத்தில் காணலாம் (DE, FR).

மருத்துவ உதவி மற்றும் அவசர விடயங்கள்

நான் எங்கு ஒரு ஆண் அல்லது பெண் குடும்ப வைத்தியரைத் தொடர்பு கொள்ளலாம்?

  • உங்கள் மொழிபேசும் ஒரு ஆண் அல்லது பெண் வைத்தியரை இங்கே காணலாம் doctorfmh.ch (DE, FR, IT, EN).
  • உங்களுக்கு ஒரு வைத்தியரை சந்திப்பதற்குத் தவணை இருப்பதுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவையாக உள்ளது? பல்கலாச்சார மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். மேலதிக தகவல்களை பிரதேசத் தொடர்பு ஏற்படுத்தும் நிலையங்கள் Interpret இணையப்பக்கம் ஊடாக நீங்கள் காணலாம் (DE).

யார் எனக்கு ஒரு மருத்துவ அவசரத்தேவையில் உதவுவார்கள்?

பேர்ண் நகரத்தின் சுகாதார சேவை

ஓய்வூதிய வயதான ஆண் மற்றும் பெண் முதியோர்களுக்கு எவ்விதமான உதவி வசதிகள் உள்ளன?

பாடசாலைகள் எவ்வித மருத்துவ வசதிகளை வழங்குகின்றன?

  • பேர்ண் நகர அனைத்து பாடசாலைப் பிள்ளைகளும் ஒழுங்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலதிக தகவல்களை பேர்ண் நகர சுகாதாரசேவை இணையப்பக்கத்தில் ( Gesundheitsdienst (PDF, 62.1 KB)) நீங்கள் காணலாம்.  

Weitere Informationen.

Fusszeile