Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

டொச் கற்றல்

நீங்கள் ஒரு டொச் வகுப்பைத் தேடுகின்றீர்களா? இந்த இணையப்பக்கத்தில் இந்த விடயம் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.

சுவிசில் நான்கு மாநில மொழிகள் உள்ளன: டொச், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் றெரோர்றொமானிஸ். ஆங்கிலமும் நன்கு பரவியுள்ளது. ஒன்றிணைந்த சுவிஸ் கூட்டமைப்பின் இணையப்பக்கதில் மொழிகள் மற்றும் மாநிலப் பேச்சுவழக்கு குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் காணலாம் (DE, FR, IT, EN, ES, PT, ZH, JA, RU)

சான்றிதழ்கள் மற்றும் நிதிப்பங்களிப்பு

Deutschbon – ஒரு டொச் பாடத்துக்கான ஒரு பணக்கூப்பன்

  • பேர்ண் நகரம் வருடத்தில் ஒரு தடவை பணக்கூப்பன்களை வழங்குகின்றது, இதன்மூலம் டொச் பாடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும். மேலதிக தகவல்களை Deutschbon இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE).

எங்கு நான் மொழிச் சான்றிதழ்கள் மற்றும் நிதிப்பங்களிப்புகளுக்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக்ககொள்ளலாம்?

  • பேர்ண் மாநிலம் இந்த விடயங்களுக்கான மேலதிக தகவல்களை Hallo-Bern.ch.  இல் வழங்குகின்றது. 
  • பேர்ண் மாநில இணையத்தளத்தில் மாநிலத்தால் நிதியுதவி வழங்கப்படும் அனைத்து மொழி வகுப்புகளையம் நீங்கள் காணலாம் (DE, FR). 
  • குறைவான பணமுள்ள நபர்கள் KulturLegi ஒரு பெற்றுக்கொள்வார்கள். KulturLegi உடன் பல கலாச்சார-, விளையாட்டு, ஓய்வுநேர- மற்றும் கல்வி வசதிவாய்ப்புகளுக்கு (மொழிவகுப்பு உட்பட) பேர்ண் மாநிலத்தில் மற்றும் சுவிஸ் முழுவதும் 30 விழுக்காட்டுக்கு மேலான கட்டணக் குறைப்பால் நீங்கள் இலாபமடைவீர்கள் (DE, FR). 

டொச் வகுப்பைத் தேடுதல்

எங்கு நான் டொச் வகுப்பைத் தேடலாம்?

  • பேர்ண் மாநில தேடும் தளங்களில் நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான வகுப்பைத் தேடலாம் (DE, FR).
  •  பேர்ண் நகரம் பாடசாலைக்கு முன்வயதான பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு Muki-டொச் வகுப்புகளில் ஒன்றுசேர்ந்து டொச் கற்பதற்கான வசதியை வழங்குகின்றது. 
  • «பாலர்பாடசாலைக்கு முன்பாக டொச் கற்றல்»  என்பது பேர்ண் நகரத்தின் ஒரு ஊக்குவிக்கும் வசதியாகும். இது பாடசாலைக்கு முன்பான வயதுள்ளவர்கள், குறைவாக அல்லது டொச் மொழி எதுவும் பேசாதவர்களை நோக்காகக் கொண்டது. இது குறித்த தகவல்களை நீங்கள் Primano-இணையப்பக்கத்தில் காணலாம் (DE).
  • பேர்ண் நகரம் இதுவரை குறைவாக அல்லது டொச் மொழி பேசாத பிள்ளைகள் மற்றும் இளையோர்களுக்கு தீவிர மொழிப்பாடங்களை வழங்குகின்றது (DE). 
  • பேர்ண் மாநிலம் «Regionale Intensivkurse PLUS» (RIK+) தீவிர பாடத்திட்டத்தை 13 தொடக்கம் 17 வயது வரையான இளையோருக்கு வழங்குகின்றது. மேலதிக தகவல்களை நீங்கள் பாலர்பாடசாலை, மக்கள்பாடசாலை மற்றும் ஆலோசனைக்கான (AKVB) திணைக்களங்களின் இணையப்பக்கங்களில் காணலாம்  (DE, FR).
  • குடிவரவாளர்களுக்கான Isa-துறைசார்நிலையம் (DE) டொச் பாடங்கள் மற்றும் fide-Test பரீட்சைக்கான ஆயத்தவகுப்புகளை வழங்குகின்றது.

எங்கு நான் ஒரு இலவசமான அல்லது மலிவான டொச் பாடத்தைப் பெறலாம்?

  • பேர்ண் நகரம் வருடத்தில் ஒரு தடவை பணக்கூப்பன்களை வழங்குகின்றது,
    இதன்மூலம் டொச் பாடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும். மேலதிக தகவல்களை Deutschbon இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE).

  • பேர்ண் பிரதேச கத்தோலிக்க ஆலயம் பேர்ண் பிரதேசத்தில் இலவசமான அல்லது
    மலிவான டொச் பாடத்திட்டங்கள் பற்றிய ஒரு பட்டியலை (Liste) தயாரித்துள்ளது (DE).

மொழிப்பரீட்சை மற்றும் மொழித்தகுதி

எனது வதிவிட அனுமதிக்கு எவ்வித மொழிச் சான்றிதழ் எனக்குத் தேவைப்படும்?

  • நீங்கள் fide-Test எனும் பரீட்சையில் தோற்றலாம்.  fide-Test என்பது ஒரு மொழிப்பரீட்சை, இது சுவிசின் அன்றாட வாழ்வை சமாளிக்கும் மொழித்திறன் உள்ளதா என சோதிக்கும். மேலதிக தகவல்களை fide இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE, FR, IT, EN).
  • மேலதிக மொழிச் சான்றிதழ்கள் குறித்த தகவல்களை இந்த இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் fideஇணையப்பக்கம் (DE, FR, IT, EN).
  • உங்கள் வதிவிட அனுமதியை நீடிக்க உங்களுக்கு ஒரு மொழிச்சான்றிதழ் தேவைப்படுகின்றதா? குடிவரவாளர்களுக்கான அரசசெயலகம் SEM இதற்காக எந்த மட்டத்தில் மொழித்தகுதி இருக்க வேண்டும் என்பதை அறியத்தரும் (DE, FR, IT, EN).

Weitere Informationen.

Fusszeile