Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

உரிமை

உங்களுக்கு சுவிசில் எவ்வித உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளதென்பதை, தெரிந்துகொள்ள விரும்புகின்றீர்களா? இப் பக்கத்தில் நாங்கள் வதிவிட அனுமதி, குடியுரிமை, குடும்பத்துடன் மீள ஒன்றுசேர்வது, திருமணம் மற்றும் ஒதுக்குதல்களிலிருந்து பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கான முக்கிய முகவரிகள் மற்றும் ஆலோசனை நிலையங்களை ஒன்றுசேர்த்துள்ளோம்.

தங்குமிட அனுமதி

எவ்விதமான தங்குமிட அனுமதிகள் (அடையாள அட்டை) உள்ளன? எனக்கு வழங்கப்படும் அடையாள அட்டையுடன், எனக்கு எவ்வித உரிமைகள் உள்ளன?

  • பேர்ண் மாநிலம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது  Hallo-Bern.ch
  • சமூக உதவி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்து  பேர்ண் நகரம் ஒரு பலமொழிகளிலான கைநூலில் விளக்குகின்றது. 

பிரஜாவுரிமை மற்றும் குடும்ப மறு ஒருங்கிணைவு

நான் எவ்வாறு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்?

தகவல்கள் மற்றும் தொடர்பு நிலையங்களை பின்வரும் இணையப் பக்கங்களில் நீங்கள் காணலாம்: 

நான் எவ்வாறு எனது குடும்பத்தை சுவிசுக்கு அழைக்க முடியும்?

நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்கின்றீர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை சுவிசுக்கு அழைக்க விரும்புகின்றீர்களா? 

  • பேர்ண் நகரத்தின் வதிவிடசேவையிடம் குடும்பத்தை மறு ஒருங்கிணைப்பது குறித்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஆலோசனை தேவையா? அப்படியானால் ஒரு தனிப்பட்ட தவணையைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.  
  • Fachstelle für Migrations- und Rassismusfragen குடிவரவு மற்றும் இனஒதுக்குதல் குறித்த கேள்விகளுக்கான துறைசார் நிலையம் தகவல் நிகழ்வுகளை Infoveranstaltungen வழங்குகின்றது.  

சட்ட ஆலோசனை மற்றும் குடிவரவாளர் உரிமை

எங்கு நான் இலவசமாக சட்ட ஆலோசனைகளைப் பெறலாம்?

பின்வரும் நிலையங்கள் உங்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் ஆலோசனைகளை வழங்கும்: 

பேர்ண் நகர இணையப்பக்கத்தில் பேர்ண் நகரத்தின் அனைத்து சட்டவிளக்கம் வழங்கும் நிலையங்களின் ஒரு பட்டியலை நீங்கள் காணலாம்.

 

வெளிநாட்டு ஆண் அல்லது பெண்ணாக எந்தச் சட்டங்கள் விசேடமாக என்னுடன் தொடர்புடையது?

  • வெளிநாட்டவர்- மற்றும் ஒத்துழைத்து முன்னேற்றும் சட்டம் (AIG) இதை ஒழுங்கு படுத்துகின்றது, உதாரணமாக விசா அனுமதி, உள்பயணிப்பது மற்றும் தங்கியிருத்தல். இந்தச் சட்டத்தை நீங்கள் இந்த இணையப்பக்கத்தில் காணலாம் Webseite des SEM;
  • AIG குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் SEM (DE, FR, IT, EN).

விசேட உரிமைகள் மற்றும் ஒதுக்குதல்களுக்கான பாதுகாப்பு

நிர்வாகத்துடன் பிரச்சினை ஏற்பட்டால் எங்கு நான் உதவியைப் பெறலாம்?

அரச நிர்வாகத்துடன் முரண்பாடுகள் ஏற்பட்டால் பேர்ண் நகரத்தின்  Ombudsstelle (சமரசம் செய்துவைக்கும் நிலையம்) ஆலோசனை மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவார்கள் (DE).

நான் இனஒதுக்குதலுக்கு உள்ளானால், எங்கு நான் உதவியைப் பெறலாம்?

நீங்கள் இனவெறி அல்லது வேறு ஒதுக்குதல்களை அனுபவித்துள்ளீர்களா? ஒதுக்குதலை அனுபவித்த வேறு மனிதர்களுக்கு நீங்கள் உதவ விரும்புகின்றீர்களா? பின்வரும் நிலையங்கள் உங்களுக்கு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்: 

கர்ப்பம், திருமணம் மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றில் எனக்கு என்ன உரிமைகள் உள்ளன?

நீங்கள் தொழில் புரிவதுடன் தாய்மை அடைந்துள்ளீர்களா? தாய்மார் மற்றும் கர்ப்பவதிகளுக்கு விசேட
உரிமைகள் உள்ளன.

  • பேர்ண் நகர  Familie und Quartier இணையப்பக்கத்தில் தகவல்கள் மற்றும் ஆலோசனை நிலையங்களை நீங்கள் காணலாம் (DE).
  • உங்கள் உரிமைகள் குறித்த தகவல்களை நீங்கள் தொழிற்சங்கங்களின் இணையப்பக்கத்திலும் Unia காணலாம். 

உங்களுக்கு திருமணம் மற்றும் தாம்பத்தியம் குறித்த கேள்விகள் உள்ளதா? 

  • திருமண விடயங்கள் குறித்த தகவல்களை நீங்கள் இங்கே காணலாம் ch.ch (DE, FR, IT, RM, EN).
  • திருமணம் செய்ய விரும்புவது, யாரை மற்றும் எப்போது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள்! வேறுவிதமானதை நீங்கள் எதிர்கொள்கின்றீர்களா? பேர்ண் நகர இணையப்பக்கத்தில் கட்டாயத் திருமணம் மற்றும் கட்டாய தாம்பத்தியம் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம் (DE).
  • இரு நாட்டு  உறவில் நீங்கள் வாழ்கின்றீர்களா? நீங்கள் சுவிசுக்குப் புதியவரா?
    Frabina அமைப்பு வித்தியாசமான தேசம் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றுசேர்ந்து வாழும் மக்களுக்கு பல மொழிகளில் ஆலோசனைகளை வழங்குகின்றது.

  • பெண்களுக்கான ஆலோசனை நிலையம் Infra பேர்ண் தாம்பத்தியம், விவாகரத்து, தாய்மை விடுமுறை மற்றும் வெளிநாட்டவர் உரிமை குறித்து இலவசமாக பல மொழிகளில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றது (DE, FR).

 

குடும்பத்தில் வன்முறை

நான் வீட்டில் வன்;முறையை அனுபவிக்கிறேன். எங்கு நான் உதவியைப் பெறலாம்?

Weitere Informationen.

Fusszeile